தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் வாங்கிய விவரங்களை அரசு திரட்டி வருகிறது. அதன்படி தற்போது வரை பலரும் நகை கடன் மோசடியில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் ஒன்றிய கூட்டுறவு வங்கியில் ஒரே நபருக்கு 300க்கும் மேற்பட்ட நகை கடன் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் ரூ.2.8 கிலோ நகைகளை அடகு வைத்து 85 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் நடந்த நகைக்கடன் மோசடிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.