Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தகுதி பெறாதோர் பட்டியல் ரெடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட பல்வேறு மோசடிகள் கண்டறியப்பட்டு, ஏழை விவசாயிகள் பயன்பெறாதது தெரியவந்தது . அதனைப்போலவே நகைக்கடன் தள்ளுபடியிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

அதாவது ஐந்து சவரன் வரை தள்ளுபடி என்பதால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகைகளை 5 சவரன் வரை வைத்து கடன் வாங்கியுள்ளனர்.அதனால் தள்ளுபடி உரிய ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நகை கடன் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த வெவ்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போலி நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் என அனைவரது பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

நகை கடன் தள்ளுபடி பெற தகுதி இல்லாதோரின் பெயர் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவ்வாறு பெயர் பட்டியலில் இடம் பெற்று அவர்களை வங்கி ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்றனர். மேலும் தள்ளுபடி பெறாதவர்கள் கேட்கும் போது அதற்கான ரசீது காண்பித்து விளக்கம் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |