தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என்று அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அதன் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். தள்ளுபடி செய்த நகை கடன் தொகை தோராயமாக 6,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில்,மொத்தத் தொகை எவ்வளவு என்பதை கணக்கிட அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.