கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோவை மாவட்ட கூட்டுறவு தானியங்கி வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் புதிதாக கூட்டுறவு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் அனைத்து வங்கியின் ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 66,000 கோடி ரூபாய் இருப்பு தொகையாக உள்ளது.
இதன்மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டும் வரும் நிலையில், கடந்த ஆண்டு 40,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14.84 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2.7 லட்சம் விவசாயிகளுக்கு 1496 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, 419 பேர் அரிசி கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சந்தைகளில் விற்கப்படும் 22 பொருட்களின் விலையை உணவு பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது என்றும் கூறினார்.