Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி…. 21, 22 தேதியில் போட்டித்தேர்வு…. miss பண்ணிராதீங்க…!!

கூட்டுறவு வங்கிக்கான உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு வரும் 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது.

சேலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21- 22-ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் வங்கி மற்றும் சங்க உறுப்பினர்களிடமிருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் கடன் உதவி, நகை கடன், பயிர் கடன், அடமான கடன்  உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக  உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களின் வளர்ச்சி நிலை விரிவாக்கத்திற்கு ஏற்ப  உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |