Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகை கடன்… ரூ.70000000 மோசடி….. அமைச்சர் பரபரப்பு தகவல் …!!

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார். சட்ட பேரவையின் மானிய கோரிக்கை மீது பேசிய திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தொழில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், சேலம் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 5 வங்கிகளில்  பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக கூறினார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள 46 வங்கிகளில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Categories

Tech |