தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டுறவுத் துறை அறிவிப்புகள், நகை கடன் தள்ளுபடி மற்றும் முறைகேடு,காலி பணியிடங்கள் நிரப்புதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, செயலாளர் நசிமுதீன் மற்றும் கூட்டுறவுத் துறையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு நகை கடன் தள்ளுபடி குறித்து அதாவது தீபாவளிக்கு முன்பு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.