Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா?… கார்த்திக் சிதம்பரம் கேள்வி…!!!

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா என்று கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா? விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறது அல்லது கடன் தொகையை அரசே செலுத்துகிறதா என்று விளக்கம் வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |