2021-2022 ஆண்டு ஜூலை 31ஆம் நாள் வரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் 78 கோடியே 69 லட்சம் ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நீண்ட கால கடன்களை வழங்கி வருகிறது எனவும், நபார்டு வங்கியிலிருந்து மறு நிதி உதவி பெற அரசு உத்தரவாதம் ஏதும் இல்லாத காரணத்தினால் 2004 இலிருந்து நீண்டகால கடன் வாங்க இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நபார்டு வங்கி இடம் இருந்து மறு நிதி உதவி பெற்று நீண்ட கால கடன்களை மறுபடியும் வழங்க பிப்ரவரி 2001இல் ரூபாய் 100 கோடிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியின் பங்கு மூலதனம் மார்ச் 31 2021 இல் ரூபாய் 51.31 கோடி ஆகவும், வைப்புகள் ரூபாய் 290.18 கோடி ஆகவும் உள்ளது எனவும், 2021 முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் வரை 78.69 கோடி நகை கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.