சேலம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் சுமார் 63 சென்ட் இடத்தில் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு பில்லுகுறிச்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட பின் பூலாம்பட்டி கிராமம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அந்த நீரேற்ற பகுதியை சுற்றியுள்ள காலி இடத்தில் வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக அப்பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு தரைமட்டமாக்கி நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கைலாசநாதர் கோவிலில் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.