Categories
அரசியல்

கூட்டு பொரியல் பற்றி கவலையில்லை…. கூட்டணி பற்றி தான் கவலை…. ஜெயக்குமார் செம கலாய் …!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கூட்டணி பற்றி தான் கவலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திடீர் ஆய்வாக மாணவர் விடுதிக்குள் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். இதுகுறித்த கேவிக்கு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் விசிட் அடிக்கட்டும். ஒரு முதலமைச்சர் வந்து செல்வது ஒரு நல்ல விஷயம் அதில் மாறுபட்ட கருத்து இல்லை.

ஆனால் விசிட் அடிப்பதனாலோ ஆய்வு செய்வதாலோ    என்ன பிரயோஜனம்? ஒரு முதலமைச்சர் வந்து போயி பென்னாகரத்தில் ஒரு ஆதிதிராவிடர் விடுதியில் கண்காணித்தார். அதை கண்காணிக்கும் போது பிள்ளைகள் கிட்ட கேட்கிறார் சாப்டியா ? அவர்கள் சாப்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்னைக்கு சமையல் என்ன ? ரசம், சாம்பார் சரி. பொரியல் இருந்ததா ? இல்லை அப்படியா வணக்கம் வரேன் இதுதான் ஒரு முதலமைச்சர் செய்கிற வேலையா ?  பொரியல் இல்லையென்றால் ஏன் பொரியல் இல்லை ? பொரியல் போடாததற்கு யார் காரணம் ?   பொரியல் கூட்டு அங்கு வைக்கவில்லை என்றால் எந்த அளவிற்கு அந்த துறை வந்து மாணவ மாணவிகளை ஏமாற்றுகிறது என்பதை அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா ? இல்லையா ?

அதை விட்டுட்ட அப்படியே கண்டு கொள்ளாமல் போய் விட்டார். இதற்கு பெயர் ஆய்வா ? அதுமட்டுமில்லாமல் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு மதிய உணவில் வந்து சாதம், ரசம் ,சாம்பார், கூட்டு பொரியல் கொடுக்க வேண்டும். அவர் கூட்டணி குறித்து தான் கவலைப்படுகிறாரே தவிர கூட்டு பொரியல் பற்றி கவலைப்படுவது கிடையாது.

Categories

Tech |