கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் முகத்தை குடும்பத்தினருக்கு காட்டாமல் காவல்துறையினர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சுமார் 14 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பெண்ணின் உடல் இரவு நேரத்தில் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் பெண்ணின் முகத்தை பார்க்க போராடியுள்ளனர். அதோடு கடைசியாக வீட்டில் பெண்ணின் உடலை ஒரு முறை வைக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் மன்றாடி கேட்டு உள்ளனர். ஆனால் பெண்ணின் முகத்தை யாரையும் பார்க்க விடாமல் குடும்பத்தினரை வீட்டிற்குள் அடைத்து விட்டனர். அதன்பிறகு உடலை எரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினரே சடலத்தை எரித்துள்ளனர். இந்த சம்பவம் காணொளியாக வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1311054885970821121