Categories
உலக செய்திகள்

கூட்ட நெரிசலான மேற்கூரையில் ஏற முயன்ற பெண்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வங்காள தேசத்தில் கூட்ட நெரிசலில் ரெயிலின் மேற்கூரையில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் நாம் சமூக வளைதளங்களில் பல வீடியோக்களையும் படங்களையும் பார்க்கின்றோம், அவை பல்வேறு காரணிகளால் நம் நினைவுகளில் அவ்வபோது வந்து செல்கின்றது. சில நேரங்களில் அவை மிகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் மிகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். சமீபத்தில் வங்காள தேசத்தில் நெரிசல் மிகுந்த ரெயிலின் கூரையில் ஏற முயன்ற பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ அதிக கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

https://www.instagram.com/reel/ChExFS4u0B7/?utm_source=ig_web_copy_link

சிறிய கிளிப்பில், அடையாளம் தெரியாத ஒரு பெண் ரெயிலின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு, அதன் கூரையை அடைய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதைக் காணலாம். ரெயிலில் இருக்கை கிடைக்காததால், அடையாளம் தெரியாத பெண் வங்காளதேசத்தில் உள்ள இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஏற முயற்சித்திருக்க வேண்டும். ஏற்கனவே கூரையில் அமர்ந்திருந்த சிலர் கைகளை நீட்டி அவளுக்கு உதவ முயன்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காவலர் அவளைப் பார்த்ததால் அவரால் கூரைக்குச் செல்ல  முடியவில்லை. மேலும் அவர் கையில் ஒரு குச்சியுடன் தன் இடத்தை அடைந்தார், இதன் விளைவாக அவர் உடனடியாக கீழே இறங்க சூழல் ஏற்பட்டது.

Categories

Tech |