Categories
மாநில செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு…. ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்….!!!

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆளுநர் இரங்கல் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மதுரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்து காயமடைந்தனர்.

அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |