கூட்ட நெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம் செய்ததால் பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பிரபல மாலில் சாட்டர்டே நைட் என்று திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்கே ஏராளமான கூட்டம் இருந்தது. அப்போது மாலின் உள்ளே ஏராளமான நபர்கள் வந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியே சென்ற பொழுது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி உள்ளார்கள். அப்போது நடிகை சானியா ஐயப்பன் அவரை தாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் எனக்கு முன்னால் நடந்து சென்ற நடிகைகளிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதை போல் தன்னிடமும் அப்படி செய்தார்கள். யாருக்கும் இது போல நடக்கக்கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
#SaturdayNight promotion event scenes. From Calicut Hilite Mall😯 pic.twitter.com/Zt16hPRTau
— ForumKeralam (@Forumkeralam2) September 27, 2022