மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.