மதுரை வழியாக இயக்கப்படும் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸில் இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸிலும் வருகிற 12-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. இதனை அடுத்து மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸில் வருகிற 7-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸில் வருகிற 6-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸில் வருகிற 10-ம் தேதி, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்ப்ரஸில் வருகிற 9-ஆம் தேதி இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. நாகர்கோவில்- கோவை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் நாளை முதல் வருகிற 11-ம் தேதி வரை, கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ் இன்று முதல் வருகிற 10-ஆம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து தாம்பரம்-நாகர்கோவில் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் வருகிற 7,10,11 தேதியிலும், நாகர்கோவில்-தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸில் வருகிற 8,11,12-ஆம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.