கூட்ட நெரிசல் பயன்படுத்தி பக்தரிடம் பணம் பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரதராஜன் என்பவரிடமிருந்த 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது திருச்சியை சேர்ந்த மஞ்சுளா தேவி, முத்துலட்சுமி, லட்சுமி, ஜெயந்தி ஆகிய 4 பெண்களும் இணைந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த 4 பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.