வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய சாறு சேர்த்து உச்சந்தலை முதல் முடியின் வேர்ப்பகுதி வரை நன்கு மசாஜ் செய்து பின்னர் இரண்டு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் இரண்டு வாரத்தில் நல்ல பலன்கிடைக்கும்.
ஆமணக்கு எண்ணைய் மற்றும் வெங்காய சாறு சேர்த்து நன்கு கலந்து தலையில் மசாஜ் செய்து ஊற வைத்து பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். இதுவும் நல்ல பலனைத் தரும்.