தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துக்களுடன் “ஸ”வையும் இணைத்து போட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துக்களுடன் ஸஎன்ற எழுத்தையும் நினைத்து படம் போடும் போது உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தை காட்டி விட்டது. இதனால்தான் “தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என்ற வள்ளுவர் அடையாளம் காட்டி போனார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்ட தமிழ்தாய் படத்தில் “ஸ” என்ற எழுத்து இடம் பெற்றது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.
Categories