வீட்டில் யாரும் இல்லாத சமயத்தல் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள பழங்குளம் குறத்தியம்மன் கோவில் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.