Categories
மாநில செய்திகள்

கூலித் தொழிலாளியின் மகள்… பரிதவித்த குடும்பம்… தமிழக அரசின் திடீர் அறிவிப்பு… உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

தமிழக அரசின் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் ரகு மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான அவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் தேர்வானார். அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.

அவரின் பெற்றோர் கூலித் தொழில் செய்து வருவதால் மருத்துவ கல்லூரி நிர்வாகம் கேட்கும் தொகையை உரிய காலத்தில் செலுத்த முடியாத பரிதாபத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் வறுமையில் வாடும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது மாணவியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தங்களின் நன்றியை மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி நேற்று காயத்ரி பிறந்தநாளை முன்னிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பிறந்த நாளை கொண்டாடி தங்களின் நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |