Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலிப்படை வைத்து மகனை கொன்ற தாய்… “ஓகே சொன்ன கலெக்டர்”… இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கலெக்டர் உத்தரவின் படி இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள  காந்திநகர்  7-வது குறுக்குத் தெருவில்  வசித்து  வந்தவர்  ராஜமாணிக்கம்  என்பவரின்  மகன் சதீஷ்குமார்(வயது 32).   இவர்  தனக்கு  சொந்தமாக லாரி ஒன்று  வைத்து ஓட்டி  வந்துள்ளார்.   இந்த நிலையில்  கடந்த ஜனவரி மாதம் இவர்   மற்றும் இவருடைய நண்பர்கள் ஆகியோர்  சேர்ந்து மண்ணச்சநல்லூர்  பக்கத்தில்  உள்ள ஈச்சம்பட்டி  ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரியபடுகிறது.  இதையடுத்து அவர்கள்  சதீஷ்குமாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த பின்பு  அவரை  அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீசி விட்டு சென்று உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து  காவல்துறையினர்   வழக்குப்பதிந்து  விசாரணை செய்ததில்  மண்ணச்சநல்லூர்  அருகே  உள்ள கல்பாளையம் கிராமத்தில்  வசித்து  வரும்  ராஜா (34), சுரேஷ் என்கிற சுரேஷ் பாண்டி (31), புல்லட்ராஜா என்கிற நளராஜா (41) ,  அரவிந்தசாமி (19)  மற்றும்  ஷேக் அப்துல்லா(45) ஆகியோர்  சதீஷ்யை  கொலை  செய்தது    தெரியவந்தது. இதையடுத்தது  5 பேரை   காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் புல்லட்ராஜா  என்பவர் மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி  ஆவார்.  இதையடுத்து விசாரணை  செய்த  போது   அவர்கள்  கொடுத்த  வாக்குமூலத்தில்  சதீஷ்குமார்  என்பவரின்  தாய் அம்சவல்லி (63) சொல்லி தான்   நாங்கள்  கொலை  செய்தோம்  என்று  கூறினர். இதையடுத்தது  அம்சவல்லியை   காவல்துறையினர்   கைது செய்தனர்.

அதனை  தொடர்ந்து   அம்சவல்லியிடம்  நடந்த   விசாரணையில்  அவர்   வாக்குமூலம்  அளித்தார்.  அதில்,  எனக்கு  சொந்தமான இடத்தை  நான் ரூ.1 கோடிக்கு மேல் விற்று  அதில், ரூ.37 லட்சத்தை  எனது மகன்  சதீஷ்குமாரிடம் கொடுத்தேன்.  அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு  மீண்டும்  என்னிடம்  பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால்  விரக்தி  அடைந்த  நான் கூலிப்படையை வைத்து மகனை   கொலை செய்தேன்  என்று  அவர்  கூறினார்.

மேலும்  ராஜா மற்றும் சுரேஷ்  இவர்கள் மீது   ஏற்கனவே  பல வழக்குகள்  இருந்ததால்  இவர்களை   காவல்துறை  அதிகாரிகள்  பரிந்துரை செய்ததால்  குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்ய கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.  இந்த  உத்தரவின்  நகல்  சிறையில்  இருக்கும்  அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.  ஏற்கனவே புல்லட் ராஜா மீதும் குண்டர்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது   குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |