பூச்சி மருந்தை குடித்துவிட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மோட்டாண்டி தோப்பு பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மாரிமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்துள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.