Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மகன்… இந்திய ஜூனியர் ஹாக்கி அணி… பயிற்சி முகாமில் தேர்வு…!!!

கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் மகன் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழும் ஹாக்கியில் மிகவும் புகழ்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்று. அங்கு நூறு ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அழிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை ‘ஹாக்கி பட்டி’ என்று கூறுவார்கள். தேசிய ஹாக்கி அணியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில் களிமண் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சேர்க்கை புல்வெளி மைதானம் அமைத்து தர வேண்டும் என்று வீரர்கள் அனைவரும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பாக கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச செயற்கைக் புல்வெளி பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் சக்திவேல் என்பவரின் மகன் மாதேஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகிய 2 பேரும் வருகின்ற 25 ஆம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ள இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஹாக்கி விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்ததாகவும், தற்போது இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் கூலித் தொழிலாளியான சக்திவேல் மகன் மாரீஸ்வரன், படிக்காமல் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது என அவரின் தந்தை கூறியுள்ளார். மேலும் அந்த வருத்தம் தற்போது இல்லை. எனது மகன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி தமிழகம் மற்றும் சொந்த ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |