Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம்   செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று விட்டு தனியாக கரும்பு தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த  வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து  சென்று வாலிபரிடமிருந்து  மீட்டு படுகாயம் அடைந்த அந்த பெண்ணை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர்  நேரில் சென்று விசாரணை வாலிபரிடம் விசாரணை  செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |