Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூலி வேலை செய்து வரும் பெண்ணின் மீது தாக்குதல்….. கணவன்-மனைவிக்கு வலைவீச்சு…. நெல்லையில் பரபரப்பு….!!!

பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் அளவீடு செய்து நட்டு வைத்திருந்த கல்லை திடீரென அகற்றியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வக்கனி நீலாவதியிடம் நியாயம் கேட்டுள்ளார்.

இதனால் நீலாவதிக்கும், செல்வக்கனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நீலாவதி மற்றும் அவருடைய கணவர் திரவியக்கனி ஆகியோர் சேர்ந்து செல்வ கனியை செங்கலால் தலையில் அடித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வக்கனி நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக களக்காடு காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திரவியக்கனி மற்றும் நீலாவதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |