கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தான் ஊத்தி கொடுத்தார் என்று அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “டிடிவி தினகரனை நம்பி தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்தார். ஆனால் அவரே ஒரு மாதத்தில் அதை உடைத்து விட்டார். நான் நிதானமாக பேசுகிறேனா என டிடிவி கேட்கிறார். ஆம் இவர்தான் எனக்கும் ஊத்தி கொடுத்தார். அவரது தொழிலே ஊத்தி கொடுப்பது தான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தான் ஊத்தி கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்ல சொல்லுங்கள்,” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.