கெங்கவல்லியில் தொழிலாளர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வனிதா மற்றும் அவரின் மகன் சதீஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மரணம் பற்றி தெரியவந்துள்ளதாவது, சதீஷ்க்கு மது அருந்த பழக்கம் இருந்திருக்கின்றது. இதனால் குடிப்பதற்கு பணம் இல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கி இருக்கின்றார். இது மொத்தமாக 10 லட்சத்துக்கு மேலானதால் கடன் கொடுத்தவர்கள் தினந்தோறும் அவரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சதீஷ் இதுப்பற்றி தனது மனைவியிடம் கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனிதாவும் அவருடைய மகனும் பள்ளிக்கு சென்று விட்டார்கள். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த சதீஷ் நாம் வீடை விற்கிறோம் என்பதால் உறவினர்களிடையே மதிப்பு மரியாதை குறையும் என்ற விரக்தியில் இருந்திருக்கின்றார். அதனால் பூச்சி மருந்து குடித்து இறந்து விடலாம் என எண்ணி மருந்து கடையில் மருந்து வாங்க சென்றிருக்கின்றார்.
ஆனால் அவருக்கு மருந்து தர மறுத்திருக்கின்றனர். இதனால் அவர் மது அருந்திவிட்டு சமையலுக்கு அறுக்கும் கத்தியை புதுசாக வாங்கி வீட்டில் அமர்ந்து முதலில் கையை வெட்டிக்கொண்டு பின் கழுத்தை வெட்டிக்கொண்டு இறந்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சதீஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.