Categories
மாநில செய்திகள்

கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே இருக்கும் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக 7 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கி 7  பேரும்  மயக்கம் அடைந்துள்ளனர்.. அந்த சமயம் அப்பகுதியில் சென்ற மக்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, இவர்கள் அனைவரும் மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சங்கீதா (16), மோனிஷா (16), திவ்யதர்ஷினி (10),  பிரியதர்ஷினி (15) ஆகிய சிறுமிகள் மற்றும் நவநிதா (18), சுமந்தா(18), பிரியா(18) ஆகிய  7 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. மேலும் கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கஉத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |