Categories
அரசியல் மாநில செய்திகள்

”கெட்டது தான் நடக்க வேண்டும்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

முக.ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். நம்முடைய மாநிலம் , விவசாயிகளை பாதுகாக்கும் த வகையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு சார்பில் நான்கு நாட்கள் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் அறிவித்தாலே அது கொள்கை முடிவுதான். அமைச்சராக  நிர்வாகத்தில் இருந்த KN நேருவுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கின்றது. அவர் ஒரு குழந்தையாக இருக்கின்றார். முதல்வரின் அறிவிப்பால் ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார். அவருக்கு எப்போதுமே கெட்டதே நடக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Categories

Tech |