நாம் ஜோதிடம் பார்க்கும்போது மிக முக்கியமாக பார்ப்பது அந்த ஜாதகருக்கு சனி நடக்கிறதா என்பதா தான் இருக்கும். அதுவும் ஏழரை சனியாக இருந்தால், அவ்வளவு தான் அடுத்து என்ன நடக்குமோ, என்ன நடக்குமோ என்று எண்ணி பயந்தே ஒரு நோயை தேடி கொண்டு வந்திடுவோம்.
ஏழரை சனி என்று ஏன் கூறுகிறோம் என்றால் சந்திரன் உள்ள ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளும், சந்திரன் குடியிருக்கும் ராசியில் சனிபகவான் இருக்கும் காலங்களைத் தான் நாம் ஏழரை சனி என்கிறோம். இந்த ஏழரை சனி காலத்தில் ஒருவருடைய ஜாதகக் கட்டங்கள் மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் இந்த ஏழரை சனி உள்ளவர் படாத இன்னல்களுக்கு ஆளாவார். அவருடன் சேர்ந்து அவருடைய குடும்பமும் பல கஷ்டங்களுக்கு ஆளாகும். ஏனெனில் இந்த சனி பகவான் துன்பங்களை மட்டுமே வாரி வழங்குவார் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. சொல்லப்போனால் ஒரு கிரகம் ஒருவருக்கு நன்மையும் தரும், தீமையும் தரும்.
ஆனால் ஏழரை சனியை பற்றி அப்படி கூறி விட முடியாது. ஏழரை சனி காலத்தில் ஒருவருக்கு சனி பகவான் எவ்வளவு துன்பங்களை தருகிறாரோ அந்த அளவிற்கு ஏழரை சனி முடியும் காலத்தில் சனி பகவான் நன்மையை வாரி வழங்கி கொண்டுதான் செல்வார். இதனால் ஏழரைச்சனியை கண்டு நாம் பயப்பட தேவையில்லை. உரிய பரிகாரங்களை செய்து சனி பகவானின் அருளைப் பெற்று துன்பங்களிலிருந்து நாம் மீளலாம்.