Categories
சினிமா தமிழ் சினிமா

கெட்டிமேளம் கெட்டிமேளம்…! ஹலோ நான் சூர்யா பேசுறேன்…. திடீர்னு வந்த போன் கால்….. இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்….!!!!

புதுமண தம்பதிகளுக்கு பிரபல  நடிகர் வாழ்த்து கூறிய சம்பவம் அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் ஆவார்‌. இவருக்கும் லாவண்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த புதுமண ஜோடிகளுக்கு நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகன் கணேசன் செல்போனுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.

அந்த போன் காலை அட்டென்ட் செய்த போது தான் அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது நடிகர் சூர்யா மாப்பிள்ளைக்கு போன் செய்து திருமண வாழ்த்து தெரிவித்ததோடு, 2 பேரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசி வாழ வேண்டும் என கூறியுள்ளார். அதோடு வெளியூரிலிருந்து வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதன் பின் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் சூர்யா கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யாவின் திடீர் அழைப்பால் புதுமண தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.

Categories

Tech |