Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன சிக்கன் பிரியாணி பறிமுதல்… உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 வணிகர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வணிக வளாக கடைகள், மளிகை கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப் உள்ளிட்ட 145 கிலோ பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |