ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தல அஜித் இணைப்பில் உருவாகிவரும் ‘வலிமை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்திற்கான பைக் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘வலிமை‘ படத்தில் நடிகர் அஜித் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் புகைப்படத்தை இயக்குநர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். இது உங்களுக்கான புகைப்படம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் அஜித் அட்டகாசமாக பைக்கில் வீலிங் செய்தவாறு காட்சியளிக்கிறார். ஏற்கனவே ‘மங்காத்தா‘, ‘ஆரம்பம்‘ போன்ற படங்களில் நடிகர் அஜித் அருமையாக பைக் ஓட்டி ரசிகர்களுக்கு திரையில் விருந்து படைத்தார். தற்போது ‘வலிமை‘ படத்திலும் அதுபோன்ற ஒரு காட்சி இடம்பெறும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.