கென் கருணாஸ், பிரீத்தி ஷர்மா இணைந்து நடித்துள்ள வாடா ராசா ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரீத்தி ஷர்மா . தற்போது இவர் கென் கருணாஸுடன் இணைந்து வாடா ராசா என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் மற்றும் நடிகையும் பாடகியுமான கிரேஸ் கருணாஸ் இருவரின் மகன் தான் கென் கருணாஸ். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக சிதம்பரம் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.
இந்நிலையில் பிரீத்தி ஷர்மா, கென் கருணாஸ் மற்றும் அவரது அம்மா கிரேஸ் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ள ‘வாடா ராசா’ ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். சோனி லேபிளுக்காக தி ரூட் நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.