ரஷ்ய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை வித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய படைகளால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனின் Arkhanhelske myrolyubivka ஆகிய இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனியா ஆயுதப்படை விடுவித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக முன்னணியில் தாக்குதல் நடத்தி தங்களை வேறுபடுத்தி காட்டிய உக்ரைனிய படைகளின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது ஜனாதிபதி ஜலன்ஸ்கி 2 சிறிய குடியேற்றங்களின் விடுவிப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பேசிய உரையில் ஜனாதிபதி ஜெகன் ஸ்ரீ உக்ரைனிய படைகளின் வெற்றி டொனாட்ஸ் பகுதியில் உள்ள லைமனுக்கு மட்டுமல்ல என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.