Categories
உலக செய்திகள்

கெர்சன் பகுதியை மக்கள் காலி பண்ணுங்க…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் துணை பிரதமர் …..!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது. அந்நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் துணை பிரதம மந்திரி இரினாவெரேஷ்சுக், தெற்கு கெர்சன் பகுதியை காலி செய்யுமாறு அங்குள்ள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உக்ரைன் மக்கள் ரஷ்ய படைகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்குவது ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும். ஏனெனில் நம் ஆயுதப்படைகள் அங்கு வெளியேற்றபடுவார்கள். அங்கு சண்டை நடைபெற வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |