ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதனால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 வருடங்களுக்குப் பின் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் தாங்கள் தலைவராக போவதில்லை என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு அசோக் கெலாட், சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாக இருக்கிறது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதாக அசோக் கெலாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதால் கட்சியின் விதியான ஒருவருக்கு ஒருவர் பதவி எனும் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகக்கூடும் என தெரிகின்றது. இதனால் முதல்வராக சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகின்றார். ஆனால் கெல்லாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து வருகின்றார்கள். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ஜெய்ப்பூர் அரசியல் நிலவரம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார் கேவும், பொதுசெயலாளர் அஜய் மேகனும் கெலாட், சச்சின் பைலட் போன்றோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு அது பற்றி அறிக்கையையும் சோனியா காந்தியுடன் சமர்ப்பித்திருக்கின்றனர்.
இந்த சூழலில் ராஜஸ்தான் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து அசோக் கெலாட் விளக்கப்படலாம் என தெரிகின்றது. அதாவது அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீட்டிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றனர். முன்னதாக முதல்வர் பதவியில் தொடர வேண்டும் அல்லது ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவர் முதல்வராக வேண்டும் அல்லது காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் கெலாட் போட்டியிடுவது பற்றி மறுசீரசீலனை செய்ய வேண்டும் என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வலியுறுத்தி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கெலாட் தூண்டி விடாமல் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இவ்வாறு சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களின் செயல் ஒழுங்கீனம் என கார்கே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.