மீன் கடைகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர் நல அலுவலர் அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மீன்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.