கொண்டைக் கடலை குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
காய்ந்த மிளகாய் – 2
கருப்பு கொண்டைக் கடலை -100 கிராம்
முந்திரி – 2
தேங்காய் துருவல் – 1ஸ்புன்
வெங்காயம் -1
தக்காளி -2
புளி – தேவைக்கு.
கொத்தமல்லி
ஸ்பூன் மிளகாய்த் தூள் – 3
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு கொண்டைக் கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து. பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்
அதன் பின் ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து,வெங்காயம், தக்காளி வதக்கவும்.
பின்பு பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்துஅரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலைவிடவும்
அடுத்தது 5 நிமிடம் கழித்து கொதித்ததும் முந்திரி தேங்காய்த் துருவல் அரைத்து விழுது சேர்த்துமீண்டும் கொதிக்கவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.