கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் நான்காவது பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. இவர்கள் தற்போது கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் உள்ளிட்டோர் இணைந்து இயக்கிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, ராகுல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படமானது வருகின்ற மே மாதம் 6-ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ளது. அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் நான்காவது பாடலான சூரத்தேங்காய் என்ற பாடலை உதயநிதி வெளியிட்டிருக்கின்றார். இந்தப் பாடலானது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.