பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி முடித்த பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— زيشان (@llii500iill) June 1, 2022
பாடி முடித்த பிறகு அவர் தனது உதவியாளர்களிடம் ஏசி வேலை செய்யவில்லை என்றும், தனக்கு சோர்வாக இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.