அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபல காலணி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்வதற்காக வித்தியாசமான முயற்சியில் தனது சுயவிவர குறிப்புகளை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அனைவரும் காகிதத்தில் தங்கள் சுய விவர குறிப்புகளை அனுப்பிய நிலையில் தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கேக் வடிவில் தனது சுயவிவர குறிப்புகளை அந்த பெண் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தென்கிழக்கு அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் கார்லி பாவ்லினாக் பிளாக் பர்ன் என்ற பெண் நைக் என்ற நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பலமுறை தனது சுயவிவர குறிப்பை அனுப்பி உள்ள நிலையில் வேலை கிடைக்காததால் புதுவிதமாக சிந்தித்து தனது சுயவிவர குறிப்புகளை கேக் மீது எழுதி அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அந்த கேக் சேர்ந்துள்ளது. அந்தப் புகைப்படத்தை அந்த பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் வந்த பெண்ணை பாராட்டி வருகிறார்கள்.