சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் தீபக் சஹரின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடும் 200ஆவது போட்டியாகும். இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தோனி சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.