Categories
சினிமா

கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!!

வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்தபடம் “டிரைவர் ஜமுனா” ஆகும். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதிகட்டத்தை எட்டி இருந்தது. சில நாட்களுக்கு முன் “டிரைவர் ஜமுனா” படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகியது. இந்த நிலையில் மும்முரமாக நடந்துவந்த “டிரைவர் ஜமுனா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |