நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
.@Samanthaprabhu2 celebrates birthday with her team! pic.twitter.com/MJ6tvGOClQ
— sridevi sreedhar (@sridevisreedhar) April 28, 2021
நேற்று நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.