Categories
சினிமா தமிழ் சினிமா

‘கேக் வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்த தருணம்’… தளபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரத்னகுமார்… வைரல் டுவீட்…!!!

பிரபல இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார் . இதை தொடர்ந்து இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை இயக்கியிருந்தார் . இதையடுத்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘கேக் வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம் . முதல் முறையாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் . விஜய் சார் நண்பன் லோகேஷ், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி’ என பதிவிட்டு தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Categories

Tech |