நடிகை பிரியாமணி கேங்ஸ்டர் படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் சையனைடு மோகன், விராட பர்வம், நாரப்பா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியாமணி அடுத்ததாக இயக்குனர் விவேக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இந்த படம் குறித்து பேசிய நடிகை பிரியாமணி ‘இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது உற்சாகமளிக்கிறது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால் அதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.