Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தந்தை “விக்ரம்”…. விமர்சித்த பிரபல விமர்சகர்…!!!!!

விக்ரம் திரைப்படத்தை விமர்சகர் கேஆர்கே விமர்சித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்பச் சென்று திரையரங்கில் பார்த்து வருகின்றார்கள்.

இந்நிலையில் சர்ச்சைகுரிய  விமர்சகர் கமால் ஆர்.கான் விக்ரம் படத்தை விமர்சனம் செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விக்ரம் படம் கேஜிஎப் 2 படத்திற்கு தந்தை என பதிவிட்டு இருக்கிறார். இவரின் ட்விட்டை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, விமர்சனம் என்ற பெயரில் கழுவிக் கழுவி ஊத்துவீர்கள். முதல் முறையாக ஒழுங்கான விமர்சனம் வந்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படத்தை விட விக்ரம் படம் நன்றாக இருக்கின்றது. அதனால் நீங்கள் சொன்னதை ஒப்புக் கொள்கின்றோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |